ஓட்டப் பந்தயம்

சூரியன் பூமிப்பந்தின் அடுத்த பக்கத்திற்கு ஒளியூட்டக்கிளம்பியிருந்தான். தாத்தாவுடன்  ஊர்சுற்றப் போனவள் அப்பொழுதுதான் உள்ளே நுழைந்தாள். “அப்பா, நாளைக்கு ஸ்கூல்ல ஸ்போர்ட்ஸ் மீட் இருக்கு. அதுக்கு வொயிட் டிஷர்ட், புளூ ஷார்ட்ஸ், ரன்னிங் ஷூ வேணும். வாங்கித் தாங்க.” மகளின் கோரிக்கை அவன் நெற்றியை உயர்த்தியது. “பாப்பா, அதெல்லாம் நம்மூர்ல கிடைக்காது. டவுனுக்குத் தான் போகணும். இன்னைக்கு நாள் முழுவதும் என்ன பண்ணுண? இப்ப முடியாது.” “அப்போ நான் எப்படி ஜெயிக்கிறது?”. பரிதாபமாக மனைவியை நோக்கினான். கைகளை விரித்தவள், […]

Continue Reading

அது ஒரு திங்கட்கிழமை

நான்கு வருடங்களாகத்தான் நிம்மதியாக வாழ்கிறேன். அதுவும் இந்த IT நிறுவனத்தில் இணைந்த பிறகு. அதிகாலையிலேயே செல்பேசி அலறியது. யாரென்று பார்த்தால் முன்பு பணியாற்றிய தீயணைப்புத்துறையிலிருந்து நண்பன். தவிர்த்தேன். தொடர்ந்த அழைப்புக்குப் பதிலளிக்காமலிருக்க முடியவில்லை. ஏற்றேன். சாதாரணமாகப் பேசியவன் அழத்  தொடங்கினான். உதவிக்கு ஆட்கள் தேவை, உடனடியாக வாவென்று கூப்பிட்டான். தட்டமுடியவில்லை. கல்ப்பாக்கம் போனேன். அங்கே அக்குடியிருப்பு முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியிருந்தது. வீடெது வழித்தடமெதுவென்றே தெரியவில்லை. இடுப்பில் கயிறைக் கட்டிக்கொண்டு தண்ணீரில் இறங்கினேன். ஆரம்பத்தில் முழங்காலளவு இருந்தது. சடக்கென […]

Continue Reading

எனக்கென யாரோ?

ஐம்பதாண்டு மணவாழ்க்கை முடிந்து அன்றோடு பதினேழு தினங்களாகியிருந்தன. கருமாதி நேற்றுதான் முடிந்தது. உடனிருந்த ஒருத்தியின் பிரிவு  எவ்வளவு கொடூரமானது என்பதை மூன்றாம் நாளே பறைசாற்றியது. நான் கொஞ்சம் கடினமானவன். காவல் ஆய்வாளர் பணி. குடும்பத்தில் குழந்தைகளையும், வெளிமனிதர்களையும் பிரித்தறியாதவன். மகன்களிடையே கண்டிப்புடனேயே வாழ்ந்தவன். இப்பொழுது இருவரும் மருமகள்களுடன் சேர்ந்து அடுத்து என்ன செய்வதெனத் திட்டமிட்டுக்கொண்டிருகிறார்கள். கண்கள் மங்கலானவுடன் காதுகளும் மந்தமாகி இருக்கலாம். கேட்டுத் தொலைத்துவிட்டேன். அவர்களுக்கு என்னை விட இந்த வீட்டின் மீது தான் நோக்கம். இன்று […]

Continue Reading

யோகாசனம்

மலை நேர நடைப்பயிற்சியைத் தொடங்கினேன். தேர்வுக் காலம், பூங்காவில் குறைவான குழந்தைகளே விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு சிறுமி தனிப்பட்டுத் தெரிந்தாள். யோகக் கலைக்கான  விரிப்பின் மீது அவ்வித்தையைப் பயின்று வந்தாள். எனது வேகத்தைக் குறைத்து அக்காட்சியைப்  பார்த்தேன். குளக்கரையின் நீரலைக்கு அசையும் தாமரைத் தண்டைப் போல அவள் உடல் நெகிழ்ந்தது. நடனக்கலைஞரின் நாட்டியத்தை மறுபதிப்புச் செய்தன இடைவிடாது தொடர்ந்த  ஆசனங்கள்.  முதுகைப் பின்புறமாக வளைத்துத் தரையைத் தொட்டவிதம் வியக்கவைத்தது. அப்பேதையைச்  சுற்றியிருந்த  நான்கு பிள்ளைகளுக்குச் சர்க்கஸ் போன்று  […]

Continue Reading

மந்திரவாதி

பள்ளியில் மாறுவேடப் போட்டி ஆரம்பித்திருந்தது. மதிய உணவிற்குப் பிறகு, இரட்டை வேப்பமரத்தினடியில்  தொடங்கியது. ராஜேஷ் பெண்ணாகவும் மல்லிகா ஆணாகவும் அலங்காரம் செய்திருந்தார்கள். கருப்பு வேட்டி கட்டி, உடம்பெல்லாம் சுண்ணாம்பால் கோடு போட்டுக்கொண்டு ஒருவன் வந்தான். கிழிந்த கோணிப்பைகளாலான ஜமுக்காளத்தை விரித்தான். பிணமெறியும்  நாற்றம் வீசியது.  தலையில் நீண்ட ஜடாமுடி. முகத்தில் இடுப்பளவுக்குத் தொங்கும் தாடியும் மீசையும். நெற்றியில் பெரிய கருமை நிறப் பொட்டு. கக்கத்திலிருந்த பையிலிருந்து கைகால் எழும்புகளை வெளியிலெடுத்து வைத்தான். அடுத்து மண்டையோடு ஒன்று. ஆசிரியரின் […]

Continue Reading

அப்பாவின் பெட்டி

பழைய வீட்டை வாடகைக்குத் தர வேண்டும். பரணைச் சுத்தம் செய்தேன். மறைந்த பெற்றோரின் பெட்டிகள் இருந்தன. அப்பாவுடையதைத் திறக்கும் ஆர்வம் மேலிட்டது. மூடியை நீக்கினேன். இடப்பக்கம் முழுவதும் கோவில் ஆண்டுவிழாப் பத்திரிக்கைகள் வரிசைக்கிரமமாகக் காணப்பட்டன. எழுதப்படாத டைரிகள்.  சில பக்கங்களில் கொடுக்கல் வாங்கல் கணக்குகள். ஓரத்தில் அவரின் பேனாக்கள். ஒன்றை நெடு நாட்களாக  உபயோகித்துப் பார்த்திருக்கிறேன். சிறிது குண்டானது. செப்பனிட்டால் இன்றும் பயன்படுத்தலாம். வேண்டாம், தவறவிட்டுவிடுவேன், அங்கேதான் பாதுகாப்பு. தந்தையிடம் போராடிப் பெற்று, நான் சிதைத்த மவுத் […]

Continue Reading

முதல் பயணம்

வானில் தன்னை சமன்படுத்திக்கொண்ட ஊர்தி இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.  விமானி அவரது  வாகனம் பறக்கும் உயரம், வேகம், இன்னபிற சொல்லவேண்டிய அனைத்தையும் கூறி முடித்தார். பணிப்பெண்ணொருத்தி தட்டில் உணவைக் கொண்டுவந்து கொடுத்தாள். இருக்கைப்பட்டையைக் கழட்டிக் கொள்ளுங்கள் என்றாள். முதல் பிரயாணம். விமானங்களை ஐகான், குருவி, வல்லூறு போன்ற அளவுகளில் பார்த்தவன், அதனுள் ஏறிச் செல்வான் என நினைத்ததே இல்லை. மேகக்கூட்டம் காலுக்கு அடியிலிருந்தது. இறங்குமிடம் நெருங்கியது. முதலில் ஒரு செல்லத் தடுமாற்றம். சிலநிமிடங்களுக்குப் பின்னர் அதுவே […]

Continue Reading

கால்விட்ட பாதக்குறடுகள்

இரண்டு தினங்களாக திருமண மண்டபம், வீடு என்பதாக சுற்றிக் கொண்டிருந்தான். சில மணி நேரத்தில் வரவேற்பு நிகழ்வுகள் ஆரம்பமாகிவிடும். அருகில் தங்கியிருந்த விடுதிக்கு உடைமாற்றச் சென்றான். குடும்பத்தினர் தயாராகி அவனுக்காக எதிர்பார்த்திருந்தனர். வியர்த்து, முகம் கருத்து வந்தவனைக் கண்ட மனைவி “ஆயத்தமாகி வாருங்கள். காத்திருக்கிறோம்” என்றாள். (பட உதவி: Firefly_Gemini Flash) குளித்துத் துணி உடுத்துவதற்குள் மாப்பிள்ளை அழைப்பிற்கு தயார், சீக்கிரம் வரவும் என்று அழைப்பு கிட்டியது. புத்தாடை புனைந்தாயிற்று. நீண்ட நெடுநாட்களுக்கு முன்பாக வாங்கிய, ஒருமுறை […]

Continue Reading

மிதிவண்டி நாட்கள்-3: வசவு

நியாய விலைக் கடையில் பொருட்களை வாங்கியவன், இல்லம் நோக்கி விரைந்து கொண்டிருந்தேன். சைக்கிள் கைப்பிடியில் பக்கத்திற்கு ஒரு மூட்டையாக சர்க்கரை, பருப்பு, பின்னால் கேரியரில் மண்ணெண்ணெய். என்னுடைய சக்திக்கு மீறி ஏற்றப்பட்டிருந்தது. நெடுஞ்சாலையில் வரும் வாகனங்களுக்கு இடையில் ஓட்ட முடியாது என்பதை உணர்ந்தவன் குறுக்குச்சந்து வழியாக வந்தேன். (பட உதவி: Firefly_Gemini Flash) அடுத்தது இரண்டாவது திருப்பம், வீட்டையடைய மேலும் சில உள்ளன. திடீரென ஒருவர், மிதிவண்டியில் தவறான திசையிலிருந்து திரும்பினார். வயது ஐம்பத்தைந்தைத் தாண்டியிருக்கும். எதிர்பாராமல் […]

Continue Reading

மிதிவண்டி நாட்கள்-2: போட்டியும் பொறாமையும்

நான் நன்றாக சைக்கிள் ஓட்டியதில் கோவிந்துவிற்குப் பொறாமை. அவன் இன்னும் அடிப்படை நிலையிலேயே இருந்தான். தினமும், பந்தயம் வைத்துக்கொள்ளலாமா என்று கேட்பான். (பட உதவி: ChatGPT) எப்பொழுதும் முடியாதென தவிர்த்துவிடுவேன். அன்று அறியாமல் சம்மதம் சொல்லிவிட்டேன். மறுதினம் முற்பகல் பதினோரு மணிக்கு போட்டி என்பது உறுதியானது. பாதை, அவர்கள் இல்லத்திலிருந்து கவையகாளியம்மன் கோவில் வரை செல்ல வேண்டும். ஏறத்தாழ இரண்டு கிலோமீட்டர்கள் தொலைவு. அடுத்த நாள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே சென்றுவிட்டேன். நண்பனின் வாகனம் சுத்தமாகத் துடைக்கப்பட்டுப் […]

Continue Reading