திருடன்
அண்ணாச்சி கடையில் அதைப் பார்த்ததும் வாங்கியே ஆகவேண்டுமென்று முடிவெடுத்துவிட்டான். அம்மா வைக்கும் பொட்டின் நிறத்தில் இருந்தது அந்தக் கிரிக்கெட் பால். தங்க எழுத்துக்களால் அதன் மீது எழுதப்பட்டிருந்தது. “ஏலே, என்னத்தப் பாக்கற” என்ற கடைக்காரரிடம், “ஒண்ணுமில்ல” என்று கூறி நகர்ந்தான். இரவு முழுவதும் தூக்கமில்லை. அப்பாவிடம் கேட்டால் வாங்கிக்கொடுத்துவிடுவார். ஆனால் நிறையக் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும். மறுநாள் பள்ளிக்குச் செல்லும்முன் அங்கே சென்றவன் உள்ளே யாரிருக்கிறார்கள் என எட்டிப்பார்த்தான். நல்வாய்ப்பாக இம்முறை கடைப்பையன் இருந்தான். “ஏனுங்ணா, அதென்ன […]
Continue Reading