About

நான் இயற்பியல் பட்டதாரி மற்றும் கணினி பயன்பாட்டில் முதுகலை முடித்தவன். 20 ஆண்டுகளுக்கு மேல் பல்வேறு நிலைகளில் முன்னணி மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்களில் பணியாற்றியவன். ஐந்து ஆண்டுகளுக்கு முன் பரீட்சார்த்தமாக இரண்டு நாவல்களை அமேசான் கிண்டில் தளத்தில் எழுதி வெளியிட்டு உள்ளேன். கதை எழுதுவதில் எனது விருப்பமான பிரிவுகள் அறிவியல் புனைவு மற்றும் க்ரைம் பிரிவுகள். இன்று முழுநேர எழுத்தாளனாக முயற்சிக்கும் ‘மாணவன்’.