வாசிப்பு

எதிர்பார்த்தது போலவே ஜன்னலோர சீட்டு கிடைத்தது. எதிரில் நடுத்தர வயது பெண்மணி ஒருத்தி அமர்ந்திருந்தாள். கையில் பெரியதொரு தலையணைப் புத்தகம்  வைத்திருந்தாள். பாதி முடிக்கப்பட்டிருந்தது. ஏதோவொரு கிராமத்தின் மத்தியில் தொடர்வண்டி நின்றது. அடுத்திருந்த நடைபாதையில் இரண்டு பெண்கள் முக்காடிட்டு உட்காரந்திருந்தார்கள். ஆண்கள் குத்துக்காலிட்டிருந்தார்கள். வடக்கிலிருந்து வந்தவர்களாக இருக்கும். பயணம் தொடர்ந்தது. புதிய பாலமொன்றைக் கட்டிக்கொண்டிருந்தார்கள். தாண்டியதும் பெருநகரச் சந்திப்பின் பிளாட்பாரத்திற்குள் வண்டி நுழைந்தது. டீ, காபி, ரயில்நிலைய அறிவிப்பாளினியின் “வண்டியெண் 6032” எதுவும் அவள் காதில் விழவில்லை. […]

Continue Reading