அப்பாவின் பெட்டி
பழைய வீட்டை வாடகைக்குத் தர வேண்டும். பரணைச் சுத்தம் செய்தேன். மறைந்த பெற்றோரின் பெட்டிகள் இருந்தன. அப்பாவுடையதைத் திறக்கும் ஆர்வம் மேலிட்டது. மூடியை நீக்கினேன். இடப்பக்கம் முழுவதும் கோவில் ஆண்டுவிழாப் பத்திரிக்கைகள் வரிசைக்கிரமமாகக் காணப்பட்டன. எழுதப்படாத டைரிகள். சில பக்கங்களில் கொடுக்கல் வாங்கல் கணக்குகள். ஓரத்தில் அவரின் பேனாக்கள். ஒன்றை நெடு நாட்களாக உபயோகித்துப் பார்த்திருக்கிறேன். சிறிது குண்டானது. செப்பனிட்டால் இன்றும் பயன்படுத்தலாம். வேண்டாம், தவறவிட்டுவிடுவேன், அங்கேதான் பாதுகாப்பு. தந்தையிடம் போராடிப் பெற்று, நான் சிதைத்த மவுத் […]
Continue Reading