மிதிவண்டி நாட்கள்-2: போட்டியும் பொறாமையும்

நுண்கதை

நான் நன்றாக சைக்கிள் ஓட்டியதில் கோவிந்துவிற்குப் பொறாமை. அவன் இன்னும் அடிப்படை நிலையிலேயே இருந்தான். தினமும், பந்தயம் வைத்துக்கொள்ளலாமா என்று கேட்பான். (பட உதவி: ChatGPT) எப்பொழுதும் முடியாதென தவிர்த்துவிடுவேன். அன்று அறியாமல் சம்மதம் சொல்லிவிட்டேன். மறுதினம் முற்பகல் பதினோரு மணிக்கு போட்டி என்பது உறுதியானது. பாதை, அவர்கள் இல்லத்திலிருந்து கவையகாளியம்மன் கோவில் வரை செல்ல வேண்டும். ஏறத்தாழ இரண்டு கிலோமீட்டர்கள் தொலைவு. அடுத்த நாள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே சென்றுவிட்டேன். நண்பனின் வாகனம் சுத்தமாகத் துடைக்கப்பட்டுப் […]

மிதிவண்டி நாட்கள்-1: புதிய முயற்சி

நுண்கதை

எனது வாட்ஸ்அப் குழு ஒன்றில் நடந்த குறுங்கதை (நுண்கதை)ப் பயிற்சிக்கான போட்டியில் நான் எழுதிய சில கதைகள் இங்கே பதிவேற்றுகிறேன். விதிமுறைகள்: மொத்தக் கதையும் 111 வார்த்தைகளுக்குள் முடிய வேண்டும்; புனைவில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பதம் மீண்டும் இடம்பெறக் கூடாது; இவ்விதி நான், நீ, அவன், இவன், வந்தான், போனான், அது, இது, அப்பா, அம்மா, காலை, மாலை தொடங்கி அனைத்துக்கும் பொருந்தும். இது முதல் கதை. (படங்கள் உதவி: ChatGPT) விடுமுறையில் பொழுதைப் போக்கியதே தெருவில் […]

இரும்புக் கை மாயாவினி

MadrasPaper கட்டுரை

நீண்ட நாட்களுக்கு பிறகு எழுத தொடங்கியுள்ளேன். எனது முதல் கட்டுரை மெட்ராஸ் பேப்பர் (www.madraspaper.com) இணைய இதழில் “இரும்புக் கை மாயாவினி” என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. கட்டுரைச் சாரம்: டில்லி லாக்கி மற்றும் அவரின் பயோனிக் கைகள் பற்றிய கட்டுரை. இவர் இருபது வயது பிரிட்டிஷ் பெண். பிறந்து பதினைந்து மாதங்களில் ஒரு நோயினால் தன் இரு கைகளையும் இழந்தவர். தற்போது பயோனிக் கைகள் கொண்டு அடுத்தவர் துணையின்றி தன் தேவைகளை தானே நிறைவேற்றிக் கொள்கிறார். இச்சிறு கட்டுரையில் […]

நான்முகி – கொற்றவைக் களப்பலி

நாவல்கள்

2024 மார்ச் மாத ஆரம்பத்தில் ஐந்து தமிழக மாணவர்களால் விண்ணிற்கு அனுப்பிவைக்கப்பட்ட ‘யாழ்சாட்டை’ பின் தொடரும் மர்மம் என்ன? லைஃப் ஸ்டைல் பத்திரிகை ஒன்றின் நிருபராக இருந்த ஆர்த்தி ஏன் புலனாய்வு நிருபராக மாறவேண்டும்? வர்மா யார்? போட்டோக்ரபி அவன் தொழிலா? நம்பிக்கைக்கு உரியவனா? அபினவ், ஸ்டெல்லா காதலுடன் விதியின் விளையாட்டுதான் என்ன? கேள்விகளுக்கு விடையை காண “நான்முகி – கொற்றவைக் களப்பலி”. Amazon Link: https://amzn.to/2wFHpUv

குருதி தேடும் இயந்திரங்கள்

நாவல்கள்

உயர் தொழில்நுட்பம் ஒன்று சமூக விரோதிகளின் கைகளில் சிக்கினால் எப்படிப்பட்ட விளைவுகள் நேரலாம் என்பதை கூறுவதே இக்கதை. 2030 அக்டோபர் மாத ஆரம்பத்தில் இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளை சில ஜந்துக்கள் தாக்குகின்றன. இந்திய உளவுப்பிரிவுகள் ஒன்றின் தலைவரான விக்ரம், அதைப் பற்றி ஆராய முற்படுகிறார். அந்த ஜந்துக்கள் அனைத்தும் ஏலியன்கள் என்ற மற்றவர் கோணத்திலிருந்து மாறுபட்டு அவர் அதை வேறு விதமாக அணுகுகிறார். அவை என்ன? அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது? அவற்றை எப்படி அழிப்பது? […]