ஓட்டப் பந்தயம்

நுண்கதை

சூரியன் பூமிப்பந்தின் அடுத்த பக்கத்திற்கு ஒளியூட்டக்கிளம்பியிருந்தான். தாத்தாவுடன்  ஊர்சுற்றப் போனவள் அப்பொழுதுதான் உள்ளே நுழைந்தாள்.

“அப்பா, நாளைக்கு ஸ்கூல்ல ஸ்போர்ட்ஸ் மீட் இருக்கு. அதுக்கு வொயிட் டிஷர்ட், புளூ ஷார்ட்ஸ், ரன்னிங் ஷூ வேணும். வாங்கித் தாங்க.”

மகளின் கோரிக்கை அவன் நெற்றியை உயர்த்தியது. “பாப்பா, அதெல்லாம் நம்மூர்ல கிடைக்காது. டவுனுக்குத் தான் போகணும். இன்னைக்கு நாள் முழுவதும் என்ன பண்ணுண? இப்ப முடியாது.”

“அப்போ நான் எப்படி ஜெயிக்கிறது?”.

பரிதாபமாக மனைவியை நோக்கினான். கைகளை விரித்தவள், ” எனக்குத் தெரியாது, நீங்களாச்சு உங்க பொண்ணாச்சு.”

போகவர ஐம்பது கிலோமீட்டர்கள். ஒவ்வொரு கடையாக ஏறித் தேர்ந்தெடுத்தாயிற்று. முன்னிரவு கடந்து திரும்புகையில் புதியதைக் கட்டிக்கொண்டே தூங்கியிருந்தாள்.

மறுநாள் வரிசையில் நின்றாயிற்று. இடதுகை மடிந்து மேலே தூக்கியிருக்க வலதுகை பின்னால் நீண்டிருந்தது. இதற்குப்

பொருத்தமாகக் கால்கள். தலை நிமிர்ந்து தாடை முன்னோக்கியிருந்தது.  கச்சிதமான முன்னேற்பாடு. விசில் சத்தம் கேட்டது.

சிறு புழுதிப்படலம். வெள்ளையுடை பழுப்பாகியிருந்தது.

“சரி வாடா, அடுத்ததடவை பார்த்துக்கலாம்”

“கீழ உலுகுலீனா ஃபர்ஸ்ட்டா வந்திருப்பேன், தெரியுமா!”

பாடக் காட்சி உதவி: ChatGPT