உயர் தொழில்நுட்பம் ஒன்று சமூக விரோதிகளின் கைகளில் சிக்கினால் எப்படிப்பட்ட விளைவுகள் நேரலாம் என்பதை கூறுவதே இக்கதை.
2030 அக்டோபர் மாத ஆரம்பத்தில் இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளை சில ஜந்துக்கள் தாக்குகின்றன. இந்திய உளவுப்பிரிவுகள் ஒன்றின் தலைவரான விக்ரம், அதைப் பற்றி ஆராய முற்படுகிறார். அந்த ஜந்துக்கள் அனைத்தும் ஏலியன்கள் என்ற மற்றவர் கோணத்திலிருந்து மாறுபட்டு அவர் அதை வேறு விதமாக அணுகுகிறார்.
அவை என்ன?
அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது?
அவற்றை எப்படி அழிப்பது?
அவரின் இக்கேள்விகளுக்கு விடைகான மற்றொரு இந்திய நிறுவனத்தின் தலைவர் குகனை நாடுகிறார். அவரின் உதவியால் அவைகள் ஏலியன்கள் அல்ல, மனிதர்களால் தயாரிக்கப்பட்ட மைக்ரோ ரோபோட்கள் என்பதை கண்டறிகிறார். அவரும் அவரின் உதவியாளர்களும் அந்த ரோபோட்களை உருவாக்கியவர்கள் யார் என்பதை கண்டறிய எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அவர்களுக்கு பின்னடைவையே கொடுக்கின்றன. அவற்றை தயாரித்தவர்களைப் பற்றி அறிந்த ஒரு சிலரை விக்ரமின் உதவியாளர்கள், அவர்களிடமிருந்து தங்களுக்கு ஏதாவது தகவல் கிடைக்குமா என அணுகுகின்றனர். ஆனால் உதவியாளர்கள் அணுகும் சில மணிநேரங்களுக்கு முன் அச்சிலரும் கொல்லப்படுகின்றனர். இப்படி ஒவ்வொரு கட்டமாக கடந்து
அந்த ரோபோட்டுகளை உருவாக்கியவர்கள் யார்?
அவர்களின் குறிக்கோள் என்ன?
அவர்களை எப்படி அழிப்பது?
என்ற கேள்விகளுக்கு விடை கூறுவதே இக்கதை.
Amazon Link: https://amzn.to/2WStt45